பக்கம்:ஏழாவது வாசல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 திருடன் போட்ட வேடம்  69

தொழுதுகொண்டிருந்த சாமியார்களைக் கண்டார்கள். ஒவ்வொருவரிடமாகச் சென்றார்கள். “ஐயா, தாங்கள் எங்கள் அரசன் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று கேட்டார்கள். குடும்ப வாழ்க்கையே வேண்டாம் என்று வந்திருந்த அந்த உண்மையான சாமியார்கள் இளவரசியைத் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்கள். அதிகாரிகள் அரசருடைய விருப்பத்தை எவ்வளவோ எடுத்துக் கூறியும் அந்தச் சாமியார்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

சாமியார் வேடத்தில் இருந்த திருடனிடம் வந்தார்கள். மற்ற சாமியார்கள் மறுத்து விட்டதைக் கவனித்த திருடன், தான் உடனே ஒப்புக் கொண்டால் ஐயம் தோன்றக் கூடும் என்று எண்ணி முதலில் மறுத்துவிட்டான். ஆனால் அதிகாரி மேலும் மேலும் வேண்டிய போது இப்பொழுதே ஒப்புக் கொள்ளலாமா, இன்னும் சிறிது நேரங்கழித்து ஒப்புக்கொள்ளலாமா? என்று நினைத்துக் கொண்டே பதில் பேசாமல் இருந்தான்.

ஏー5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழாவது_வாசல்.pdf/71&oldid=994069" இலிருந்து மீள்விக்கப்பட்டது