பக்கம்:ஏழாவது வாசல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 பறையன் இடித்த சங்கராச்சாரியார்  73

விரும்பவில்லை. ஆனால் நான் ஒன்று தங்களைக் கேட்க விரும்புகிறேன். நான் தங்கள் மீது பட்டதாக எப்படிச் சொல்ல முடியும்? தாங்கள் என்பது யார்? தங்கள் உடலா? தங்கள் மனமா? அல்லது தங்கள் அறிவா? இவற்றில் தாங்கள் யார்? தங்கள் உயிருக்கும் இவற்றிற்கும் என்ன தொடர்பு உண்டு? ஒன்றும் தொடர்பில்லை என்பதைத் தாங்கள் அறிவீர்களே! தங்கள் உயிரின் மீது நான் இடித்து விட்டேனா? எதற்காக சினம் கொள்கிறீர்கள்?” என்று கேட்டான்.

வேத ஞானம் படைத்த அந்தப் பறையனுக்குப் பதில் சொல்ல முடியாது சங்கராச் சாரியார் விழி விழி யென்று விழித்தார்.

சங்கராச்சாரியார் போன்ற அறிவாளிகள் மனிதனுக்கு மனிதன் வேறுபாடு இல்லை என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்கு மாறாக அவர்களே பறையர்களை இழிவாகக் கருதிக் கொண்டிருந்தால், அவர்கள் கொண்ட அறிவெல்லாம் குப்பை மேட்டுக்குக் கூடப் பயன்படாது என்பதை இக்கதையிலிருந்து அறிகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழாவது_வாசல்.pdf/75&oldid=994076" இலிருந்து மீள்விக்கப்பட்டது