பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 63 பெரிய புராண விளக்கம்-4

இந்தப் பாடல் குளகம். வாரணச் சேவலோடும்.சேவற் கோழியுடனும். வரி-கோடுகளைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். மயிற்குலங்கள்-மயிற் கூட்டங்களை. விட்டு-திருக்கோயிலுக்கு அர்ப்பணமாக விட்டு, த்: சந்தி. தோரணம்-மாவிலை, தென்னங் குருத்தோலை, மலர்கள் முதலியவற்றைக் கட்டி அமைத்த தோரணத்தையும். மணிகள்-மாணிக்கங்களையும். தூக்கி-தொங்க விட்டு. ச்: சந்தி. சுரும்பு-வண்டுகள் மொய்க்கும்; ஒருமை பன்மை மயக்கம். அணி-அழகிய கதம்பம்-பல மலர்களைக் கட்டிய கதம்ப மாலைகளையும்; ஒருமை பன்மை மயக்கம். நாற்றிதொங்கவிட்டு, ப்: சந்தி. போர் அணி-போர் புரிதலை யே தனக்கு அலங்காரமாகக் .ெ க | ண் ட. நெடு-நீண்ட. வேலோற்கு-வேலை ஏந்திய முருகனுக்கு. ப்: சந்தி. புகழ்அவனுடைய புகழை. புரி-விரும்பிப்பாடும். குரவை-குரவைக் கூத்தை கைகளைக் கோத்துக் கொண்டு ஆடும் கூத்தை. தூங்க-ஆட. ப்: சந்தி. பேர்-பெருமையைப் பெற்ற அணங்கு -தெய்வப் பெண்ணாகிய பூசாரிச்சி. ஆடல்-நடனத்தை. செய்து-புரிய எச்சத் திரிபு. பெரு-பெரிய. விழா-திரு விழாவை. எடுத்த-கொண்டாடிய. பின்றை-பிறகு

பின்பு உள்ள 12-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

"டோர் செய்து பழகியதால் உண்டாகிய தழும்புகள் விளங்கிய உடம்புகளைப் பெற்ற வேடர்களுடைய தலைவ .ணாகிய நாகன் என்பவனுக்கு மதில்களை உடையவையும், தாரகாட்சன், வித்யுன்மாலி, வாணன் என்னும் மூன்று அசுரர்களுக்கு உரிய பறக்கும் கோட்டைகளும் ஆகிய மூன்று புரங்களையும் அழித்தவரும், அடியேங்களுடைய தந்தையைப் போன்றவருமாகிய காளஹஸ்தீசுவரருடைய .புதல்வராக விளங்குபவரும், மயிலாகிய வெற்றியைப் பெறும் வாகனத்தை ஒட்டுபவரும், கிரெளஞ்ச மலையின் நடு இடத்தை வேலாயுதத்தினால் கிழியுமாறு செய்தருளிய வரும், உறுதியான வேலாயுதத்தை உடைய விசாலமான வலக்கையைப் பெற்றவரும், போரில் சூர்பதுமனை