பக்கம்:மாயக் கள்ளன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டும் என்று அவன் விரும்பினான். தங்கம் நிறைய வேண்டும் என்று அவனுக்குப் பேராசை. அதனால், அவனைத் தங்கமுத்து மாணிக்கம் என்பதற்குப் பதிலாகத் தங்கப்பித்து மாணிக்கம் என்று கேலியாகச் சொல்வார்கள். அவன் நல்ல உணவுகூடச் சாப்பிடமாட்டான். உணவுக்குப் பணம் செலவழிக்கவும் அவனுக்கு மனம் வராது. பல நாள்களில் கஞ்சி மட்டும் குடிப்பான். யாருக்காவது ஒரு சல்லிக்காசு தருமம் செய்யவும் அவன் சம்மதிக்கமாட்டான். அதனால், அவனிடம் யாருமே தருமம் கேட்க வரமாட்டார்கள்.

ஒரு நாள், தூரதேசத்திலிருந்து ஒரு பரதேசி அந்த ஊருக்கு வந்தான். அவனுக்குத் தங்கமுத்து மாணிக்கத்தைப் பற்றித் தெரியாது. அவன் ஏழடுக்கு மாளிகையைப் பார்த்ததும், முதலில் பிச்சை கேட்க அங்குச் சென்றான். தங்கமுத்து மாணிக்கம் அவன் வாயில் வந்தபடி திட்டினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/70&oldid=1277001" இலிருந்து மீள்விக்கப்பட்டது