பக்கம்:குமண வள்ளல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரியா விடை

37

“நான் வேண்டிய பொருள்களை அனுப்புகிறேன் என்று அன்றே சொன்னேனே!”

“என்னையே அனுப்பிவிட வேண்டுகிறேன்.”

“குழந்தையின் நினைவு வந்துவிட்டதோ?”

“குழந்தையின் மழலையும் அழகும் நினைவுக்கு வரவில்லை. அவனுடைய பசிதான் நினைவுக்கு வருகிறது. இதை மன்னர் பெருமான் சற்றே காது கொடுத்துக் கேட்க வேண்டும். என்னுடைய மகன் சிறிய குழந்தைதான். அவன் எப்போதும் வீட்டுக்கு வெளியிலே தான் இருப்பான். வீட்டில் உணவு போட்டால்தானே வீட்டு நினைவு வரும்? உணவு என்ற பொருளே வீட்டில் இல்லாமையால் அவன் தன் பரட்டைத் தலையோடு வெளியிலே உலாவிக்கொண்டிருப்பான். எப்போதாவது வீட்டுக்கு வந்தால் தன் தாயை அணுகிப் பால் உண்ண முயல்வான். அது கிடைக்காமையால், கூழ் இருக்கிறதா, சோறு இருக்கிறதா என்று ஒவ்வொரு சட்டியையும் திறந்து திறந்து பார்ப்பான். எல்லாம் சூனியமாக இருப்பதைக் கண்டு அழத் தொடங்குவான். அவன் அழுகை என் மனைவியின் உள்ளத்தை உலுக்கும். அவள் என்ன செய்வாள் பாவம் அவனைச் சமாதானம் செய்யப் பார்ப்பாள், வயிறு கிண்டும்போது சமாதானப் பேச்சு என்ன செய்யும்? அதோ புலி வருகிறது! அழாதே. அழுதால் புலி கடித்துவிடும்' என்று பயமுறுத்துவாள். குழந்தை ஒரு கணம் பேசாமல் இருப்பான். பசியென்னும் புலி உண்மையாகக் கடிப்பதால் மறுகணம் அழுவான். உடனே அவனை இடுப்பில் எடுத்துக்கொண்டு வெளியில் வந்து, ‘அதோ பார், நிலா. எங்கே, நிலா நிலா வா வா என்று கூப்பிடு பார்க்கலாம்’ என்று நயமாகப் போக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/43&oldid=1362564" இலிருந்து மீள்விக்கப்பட்டது