பக்கம்:மாயக் கள்ளன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

21 ஓர் அழகான நந்தவனம் இருந்தது. அதிலே அதிசய மான பூவெல்லாம் நிறைய இருக்கும். அங்கே எப்பொழுதும் வாசனை கம்மென்று வீசும். எப்பொழுதும் யாரோ இனிமை யாகப் பாடிக்கொண்டே இருப்பார்கள். அந்த நந்தவனத்திலே எத்தனையோ குழந்தைகள் சந்தோஷமாக விளையாடிக் கொண் டிருந்தன. எல்லாம் அழகான குழந்தைகள். அவைகள் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்கும். விளையாடு வதற்கு என்ன வேண்டுமானாலும் அவைகளுக்குக் கிடைத்தது. அதனால் அவைகள் அப்படிச் சிரித்துக்கொண்டே இருந்தன.

அந்தக் குழந்தைகளிலே ஒரு குழந்தைக்குச் சின்னப் பாப்பா என்று பெயர். ஒரு நாள் திடீரென்று ஒரு பெரிய கழுகு, எங்கிருந்தோ பறந்து வந்தது. அது சின்னப் பாப்பாவைத் -- - - தோர் கமே தூக்கிக் கொண்டு வானத்திலே பறந்து போய்விட்டது. அது போன இடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்மை, அந்தக் கழுகு சின்னப் பாப்பாவைத் தூக்கிக்கொண்டு போய், ஓர் இருண்ட காட்டுக்குள்ளே போட்டுவிட்டது. உயரத்திலே இருந்து சின்னப் பாப்பாகீழே விழும்போது அதற்கு. ஒரே பயமாக இருந்தது. “வீர் வீர்' என்று கத்திவிட்டது. ஆனால், சின்னப் பாப்பா கீழே பொத்தென்று விழாதபடி யாரோ மெதுவாக மடியிலே தாங்கிக் கொண்டார்கள், அதனால் சின்னப் பாப்பா சுகமாகப் படுத்துத் தூங்கிவிட்டது. அப்படியே அது மாதக் கணக்காகப் படுத்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/24&oldid=1276961" இலிருந்து மீள்விக்கப்பட்டது