பக்கம்:மாயக் கள்ளன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 if வழியில்லாததால் மாம்பழச் சித்தர் அவன் கூறியபடியே செய்ய ஒப்புக்கொண்டார். அத்துடன் அன்று மாலேயில் வந்து கூடிய மக்களுக்கு முன்னல் அவர் தமது சீடனப்பற்றிப் பெருமை யாகவும் புகழ்ந்து பேசினர். நமது சீடன் இப்பொழுது ஒரு சித்தகை மாறிவிட்டான். நான் செய்கின்ற அற்புதமெல்லாம் அவனும் செய்வான். அவனே நீங்கள் இனிமேல் கொடுக்குச் சித்தர் என்று அழைக்க வேண்டும்’ என்று அவர் சொன்னர், அடுத்த நாள் முதல் கொடுக்குச் சித்தன் தனது குரு நாதருடைய ஆசனத்தில் உட்கார்ந்துகொண்டான். தேங்காய் பழமே வா’ என்று சொல்லுவான். மாம்பழச் சித்தர் திரை மறைவில் இருந்துகொண்டு தட்டத்தைத் தள்ளுவார். இதைக் கண்டு எல்லோரும் கொடுக்குச் சித்தனே வணங்கத் தொடங்கினர்கள். இவ்வாறு சில நாள்கள் நடந்தன. கொடுக்குச் சித்தனின் பெருமை எங்கும் பரவிற்று. அவன் இனிமேல் குருநாதருடைய தயவை எதிர்பார்க்க வேண்டியதில்லே என்று தெரிந்து கொண்டான். அவரை எப்படியாவது ஒழித்துவிட வேண்டு மென்று தீர்மானித்தான். ஒரு நாள் இரவு மாம்பழச் சித்தர் தமது அறையிலே படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். கொடுக்குச் சித்தன் அந்த அறைக்குள்ளே மெதுவாக நுழைத்து, மாம்பழச் சித்தருடைய வாயில் துணியை வைத்து அடைத்துவிட்டான். அத்துடன் அவரை ஒரு கயிற்ருல் நன்ருகக் கட்டின்ை. யாரும் அறியாதபடி அவரைத் தூக்கிக்கொண்டு போய்ப் பக்கத்தில் இருந்த ஆற்றில் போட்டுவிட்டான். அடுத்த நாள் காலேயில் ஆசிரமத்திற்கு வந்தவர் களிடமெல்லாம் கொடுக்குச் சித்தன், "குருநாதர் தமது உடம்போடு தெய்வலோகம் போய்விட்டார்’ என்று சொன்னன். மாம்பழச் சித்தர் ஆற்றில் மூழ்கி இறந்து போயிருப்பார் என்றும், அவருடைய உடம்பை முதல்கள் தின்றிருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/114&oldid=867608" இலிருந்து மீள்விக்கப்பட்டது