பக்கம்:மாயக் கள்ளன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

81 வள்ளிநாயகி இவற்றையெல்லாம் பொறுமைபோடு சகித்துக்கொண்டு வந்தாள். அவள் வாய் திறக்கவே இல்லை . ஒரு நாள் அழகுசுந்தரியின் குழந்தை பாட்டியைக் கூப்பிட்டுக்கொண்டே ஓடி வந்தது. வள்ளிநாயகி அதற்குச் சடை பின்னிவிட்டான். பூக்களைக்கொண்டு புது விதமாகத் தலையில் அழகு செய்தாள். அந்தச் சமயத்தில் அழகுசுந்தரி அங்கு வந்துவிட்டாள். அவளுக்கு அடக்க முடியாத கோபம் வந்தது. வள்ளிநாயகியைத் திட்டியதோடல்லாமல் கையி லிருந்த சாட்டையால் அவளை ஓங்கி ஓங்கி அடித்தாள். வள்ளி நாயகி மௌனமாக வலியைப் பொறுத்துக்கொண்டு நின்றாள்.

  • அம்மா, பாட்டியை அடிக்காதே' என்று குழந்தை கூறிக் கொண்டே குறுக்கே வந்தது.

' அவளைப் பாட்டி என்று கூப்பிடக்கூடாதென்று உனக்கு தான் சொல்லவில்லையா?' என்று அழகுசுந்தரி கோபத்தோடு கேட்டாள். குழந்தை அவளைக் கவனிக்கவில்லை. 'பாட்டி, உனக்கு வலிக்குதா?" என்று அது வள்ளிநாயகியைக் கேட்டது. மா, க.--6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/84&oldid=1277009" இலிருந்து மீள்விக்கப்பட்டது