பக்கம்:மாயக் கள்ளன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 தான் அதை நன்ருகக் கடிக்கும். பாவம், நாகப்பாம்பு மூர்ச்சை போட்டு விழுந்து மயங்கிக் கிடக்கும்.

இவ்வாறு பல தடவை கீரியால் கடியுண்டதால் அந்தப் பாம்புக்கு முக்கால்வாசி உயிர் போய்விட்டது. அதன் பலமும் போய்விட்டது. அதனல், அதற்குக் கீரியோடு கொஞ்ச நேரங் கூடச் சண்டையிட முடியவில்லே. பாம்பாட்டி மகுடியை எடுத்து ஊதும்போது படமெடுத்து ஆடவும் முடியவில்லே. அந்தப் பாம்பு இனி உதவாது என்று அந்தப் பாம்பாட்டிக்குத் தெரிந்துவிட்டது. அதை எங்காவது போட்டுவிட அவன் நினேத்தான். ஒரு பக்கத்திலே காட்டுத்தி கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. அதற்குள்ளே அவன் அந்தப் பாப் பைத் தூக்கி எறிந்தான். ஆத்மரங்கன் தீயினுள் துடித்துக்கொண்டு கிடந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/12&oldid=1276954" இலிருந்து மீள்விக்கப்பட்டது