பக்கம்:மாயக் கள்ளன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 வருவதை அவள் கண்டுகொள்ளவில்லை. செங் கா ற் று விக்கிரமனுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. ஒவ்வோர் அமாவாசை இரவிலும் விக்கிரமன் ஒவ்வொரு வனத்துக்குச் சென்று, அங்குள்ள மாளிகையைப் பார்வையிட்டு வந்தான். ஒரு மாளிகையிலே தங்கம் கட்டி கட்டியாகக் கிடந்தது. ஒரு மாளிகையிலே ஏராளமான தின்பண்டங்கள் இருந்தன. விக்கிரமன் அவை ஒன்றையும் தொடாமல், அங்கு அடைபட்டுக் கிடக்கும் கைதிகளிடம் பேசி விவரம் தெரிந்துகொண்டு வந்தான். அவர்கள் கூறுவனவற்றையெல்லாம் கேட்கக் கேட்க விக்கிரமனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நாகவல்லியிடம் சந்தேகம் வந்தது. ஆனல், அவன் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. கடைசியில், ஓர் அமாவாசையன்று விக்கிரமன் முதல் வனத்துக்கே சென்ருன். கிழவனே மறுபடியும் கண்டான். நாகவல்லி பெண் அல்ல என்றும், பெண் வேஷம் எடுத்துக் கொண்டிருக்கும் ஐந்துதலே நாகம் என்றும் கிழவன் வற்புறுத்திச் சொன்னன். 'உனக்குப் பைத்தியம் என்று அவள் சொல்கிருளே? என்று விக்கிரமன் கேட்டான். அப்படிச் சொல்லித்தான் உன்னே ஏமாற்றி இருக்கிருள். அவள்தான் ஐந்துதலே நாகம் என்று தெரிந்துகொள்ள வேண்டுமானல், அடுத்த அமாவாசையன்று அவள் ரகசியமாகப் ாகிற இடத்துக்கு நீயும் போய்ப் பார். அவளுக்குத் சிபாமல் அவள் பின்னலேயே போ. ஆ ைல், இ%ள்ளே மட்டும் போகாதே. வெளியிலிருந்து எல்லா 'சி' கவனி எள்று கிழவன் சொல்லியனுப்பின்ை. அடுத்த அமாவாசை இரவு வந்தது. விக்கிரமன் படுத்துறங்குவது போலப் பாசாங்கு செய்தான். நாகவல்லி வெளியே புறப்பட்டான். விக்கிரமன் சட்டென்று படுக்கையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/66&oldid=867746" இலிருந்து மீள்விக்கப்பட்டது