பக்கம்:ஏழாவது வாசல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கோயிலும் உள்ளமும்

ஓர் ஊரில் ஓர் இளைஞன் இருந்தான். அவன் பெயர் பத்மலோசனன். அவ்வூரார் அவனை “பொடோ” என்று விளையாட்டாக அழைப்பார்கள்.

அந்த ஊரில் ஒரு பாழடைந்த கோயில் இருந்தது. அங்கு தெய்வத்தின் சிலை இல்லை. எங்கும் புல்பூண்டு முளைத்து, காக்கை, குருவி வெளவால் ஆகியவற்றினால் அசுத்த மடைந்து கோயில் ஒரே நாற்றமாக இருந்தது. அதனால் அங்கே யாரும் போவதில்லை,

ஒருநாள் திடீரென்று அந்தக் கோயிலின் மணி ஓசை முழங்கிற்று. தொடர்ந்து கோயில் மணி அடிக்கவே ஆங்காங்கிருந்து பலர் கோயிலை நோக்கி வந்தார்கள்.

கோயிலை யாரோ சுத்தம் செய்து தெய்வம் வைத்துப்பூஜை ஆரம்பித்திருக்கிறார்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழாவது_வாசல்.pdf/29&oldid=990433" இலிருந்து மீள்விக்கப்பட்டது