பக்கம்:மாயக் கள்ளன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வரக்கனேக் கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்துத் தின்னத் தொடங்கிற்று. ஒரு நாள் அது அணுவரக்கனுடைய கைவிரல் களில் ஒன்றைக் கடித்துத் தின்றது. அடுத்த நாள் மற்ருெரு விரலேக் கடித்தது. மூன்ரும் நாளில் அவனுடைய காதுகளைக் கடித்து விழுங்கிவிட்டது. நான்காம் நாளில் அணுவரக் கனுடைய மூக்குப் போய்விட்டது. இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உறுப்புப் போவதைக் கண்டதும் அணுவரக்கனுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. என்ன செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. உயிரோடிருந்த மீதி விஞ்ஞானிகளே அவன் கூப்பிட்டான். "இந்த விஞ்ஞான பூதத்தைக் கொல்வதற்கு வழியில்லேயா ? அந்த வழியை ரகசியமாக உடனே கண்டுபிடியுங்கள்’ என்று அவர்களிடம் சொன்னன். உயிர் தப்பில்ை போதும் என்று அவன் நினக்க ஆரம்பித்தான். 'நீங்கள் கண்டுபிடித்த பூதத்தை எங்களால் கொல்ல முடியாது’ என்று அவர்கள் சொன்னர்கள். அணுவரக்கன் பூதத்தைக் கொல்லத் தானே வழி கண்டு பிடிக்கத் தொடங்கின்ை. அவன் ஆராய்ச்சிக்கூடத்தில் அமர்ந்து வேலே செய்வதை விஞ்ஞான பூதம் கண்டது. அது உடனே விஷயத்தைப் புரிந்துகொண்டுவிட்டது. விஞ்ஞான பூதத்திற்குக் கோபம் பொங்கியெழுந்தது. அது அணுவரக்கனேயும் ஆராய்ச்சிக் கூடத்தையும் அப்படியே தூக்கி வாயில் போட்டு விழுங்கிவிட்டது. விஞ்ஞான பூதத்தின் வயிற்றுக்குள் ஆராய்ச்சிக்கூடம் தலைகீழாகப் போய் விழுந்தது; அணுவரக்கனும் குப்புற விழுந்தான். அப்படித் தலைகீழாக விழுந்ததால் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்த புட்டிகளெல்லாம் வயிற்றுக்குள் கவிழ்ந்து கீழே விழுந்து புரண்டன. புட்டிகளிலிருந்த திராவகங்களும் மருந்து களும் பூதத்தின் வயிற்றுக்குள் கொட்டிக் கலந்தன. அவற்றி லிருந்து திடீரென்று ஒரு பெரிய புகை கிளம்பிற்று. புயல் ப்ோல அது பெரிதாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/97&oldid=867808" இலிருந்து மீள்விக்கப்பட்டது