பக்கம்:மாயக் கள்ளன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 ‘சாமி, எனக்கு நிறையத் தங்கம் வேண்டும்' என்று தங்கமுத்து மாணிக்கம் தெரிவித்தான். “டேய்! மறுபடியும் கீழே விழுந்து என் காலைத் தொட்டுக் கும்பிடு' என்று பரதேசி கண்ணை மூடிக்கொண்டே சொன்னான். கையிலிருந்த ஜபமாலையை அவன் வேகமாக உருட்டினான். 'சம்போ மகாதேவா' என்று அடிக்கடி கூவினான். தங்கமுத்து மாணிக்கம் பல தடவை காலில் விழுந்து கும்பிட்டான். “டேய், உனக்குத் தங்கமா வேண்டும்? அப்படி யானால் இங்கிருந்து நேர் தெற்கே போ. நெடுந்தூரம் போனால் அங்கே ஒரு பெரிய வனம் இருக்கும். அதற்குள்ளே புகுந்து தெற்கு நோக்கியே போனால் அங்கே ஒரு கோயில் தென்படும். அந்தக் கோயிலில் உள்ளே இருக்கும் சாமிக்குத் தங்கவரப் பெருமாள் என்று பெயர். அவரிடம் போ, உடனே புறப்படு' என்று பரதேசி சொல்லி ஆசீர்வாதம் செய்தான்.

தங்கமுத்து மாணிக்கம் உடனே புறப்பட்டான். நடந்து போனால் பல நாள்கள் ஆகுமென்று நினைத்து, குதிரை ஒன்றன் மீது அமர்ந்து பிரயாணத்தைத் தொடங்கினான். அவனுடைய லாயத்திலே நல்ல நல்ல குதிரைகள் இருந்தன. ஆனால், அந்த நல்ல குதிரைகளில் ஒன்றை உபயோகப்படுத்த அவனுக்கு மனம் வரவில்லை. விலை உயர்ந்த குதிரைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/72&oldid=1277000" இலிருந்து மீள்விக்கப்பட்டது