பக்கம்:மாயக் கள்ளன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அவள் குழலின் ஓசையைக் கேட்டுக்கொண்டே, மெதுவா! அடிமேலடி வைத்து, மயிலிருக்கும் அறைக்குள் நுழைந்தாள் குழல் வாசிப்பதிலேயே கவனத்தைச் செலுத்தியிருந்த மணிவண்ணன் அவள் வந்ததைக் கவனிக்கவில்லே. மேலும் ஒரே இருட்டாக இருந்ததால் சுந்தரியின் உரு வ மு ப் தெரியவில்லை. குழல் ஓசை வருகின்ற இடத்திற்குச் சுந்தரி வந்து சேர்ந்தாள். அப்பொழுது மணிவண்ணன் ஒரு புதிய பாட்டை மிக நன்ருக வாசித்துக்கொண்டிருந்தான். அதன் இசையிலே மயங்கிய சுந்தரி வழக்கம் போல் மயிலேக் கட்டியணைக் விரும்பினள். அப்படி அவள் அணக்கும் போது, அங்கே இருந்தது மயிலல்லவென்றும் மனித உருவமென்றும் அவளுக்குத் தெரிந்து திடுக்கிட்டாள். யார் நீ? இங்கே எப்படி வந்தாய்? என்று கோபத்தோடு கேட்டுக்கொண்டே, அவள் தன் இடுப்பிலிருந்த உடைவாளே எடுத்து, மணிவண்ணன் மார்பிலே குத்திவிட்டாள். சுந்தரி, என்ன வேலே செய்தாய்? என்று கூவிக்கொண்டே மணிவண்ணன் தரையிலே சாய்ந்தான். சுந்தரி அலறித் துடித்தாள். தன் அறைக்கு ஓடிப் போய், ஒரு விளக்கை எடுத்துக்கொண்டு வந்து பார்த்தாள். மணிவண்ணன் சாகும் நிலையிலே கிடந்தான். அவன் மார்பி லிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. "ஐயோ இளவரசே, நீங்களா இந்த மயிலுக்குள் ஒளித் திருந்தீர்கள்?’ என்று கேட்டுக்கொண்டே சுந்தரி விம்மி விம்மி அழுதாள். உன்னேப் பார்க்க வேண்டுமென்ற ஆசையால் தான் நான் இப்படி இரகசியமாக வந்தேன்’ என்று சொல்லி விட்டு மணிவண்ணன் இறந்து போனன். அவன் இறந்ததைக் கண்டு சுந்தரி பெருந்துக்கம் கொண்டாள். இனிமேல் உலகத்தில் உயிர் வாழ்வதில்க் என்று முடிவு செய்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/55&oldid=867721" இலிருந்து மீள்விக்கப்பட்டது