பக்கம்:மாயக் கள்ளன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

  • நான் கதை சொல்லிக்கொண்டே உன் கூடவே வரு கிறேன். ஆனால், நான் கதை சொல்லுவதற்கும், உன்கூட வருவதற்கும் ஒரு நிபந்தனே உண்டு. அதற்கு நீ சம்மதித்தால் தான் நான் கதை சொல்லுவேன்’ என்ருன் மாயக்கள்ளன். சிறுவன் தனது நிபந்தனேயை எற்றுக்கொள்வான் என்று மாயக் கள்ளனுக்குத் தெரியும். இருந்தாலும், அவனிடம் வாக்குறுதி பெற வேண்டும் என்று அவன் அப்படிக் கேட்டான். ஆத்ம ரங்கனே மலேயுச்சிக்குப் போகவிடாமல் தடுக்க வேண்டும் என்பது அவனுடைய எண்ணம். மலேயுச்சிக்குப் போய்விட்டால் மாயக்கள்ளனுடைய மாயமெல்லாம் அவனுக்குத் தெரிந்து விடும். அதனல் மாயக்கள்ளன் இப்படிச் சூழ்ச்சி செய்தான். அது ஆத்மரங்களுகிய சிறுவனுக்குத் தெரியவில்லே.

'என்ன நிபந்தனே ? அதைச் சொல்” என்று கேட்டான் சிறுவன். "நான் கதை சொல்லிக்கொண்டே உன்கூட மலைமேல் ஏறுவேன். நீ விடாது மலேயில் ஏறும் வரையில் நானும் ஏறுவேன். ஆனால், நீ சோர்வடைந்து வழியில் படுத்துத் தூங்க ஆரம்பித்துவிட்டால் உடனே நான் உன்னேக் கீழே மலேயடிவாரத் திற் குக் கொண்டுபோய்விடுவேன். இந்த நிபந்தனேயை நீ ஒப்புக்கொள்ள வேண்டும்’ என்ருன் மாயக் கள்ளன், சிறுவனுக்கு அந்த நிபந்தனேக் கஷ்டமானதாகத் தோன்ற வில்லே. நான் எ த ற் குத் தூங்கப்போகிறேன் ? கதை கேட்டுக்கொண்டிருந்தால் எனக்குத் தூக்கமே வராது. களேப் பும் ஏற்படாது. விடாமல் மலைமேல் ஏறிக்கொண்டே இருக்கலாம்” என்று அவனுக்குத் தோன்றியது. அதனல் உடனே அவன் கொஞ்சமும் தயக்கமில்லாமல் மாயக்கள்ள னுடைய நிபந்தனேய்ை ஏற்றுக்கொண்டான். மாயக்கள்ளன் தனது எண்ணம் பலித்ததென்று மகிழ்ச்சி யோடு கதைச் சொல்லத் தொடங்கின்ை. கதையைக் கேட்டுக் கொண்டே சிறுவன் மலேமீது எறலானன். மாயக்கள்ளனும் அவன் கூடவே வந்துகொண்டே கதையைச் சொல்லிக்கொண் டிருந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/31&oldid=867670" இலிருந்து மீள்விக்கப்பட்டது