பக்கம்:ஏழாவது வாசல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56ஏழாவது வாசல்

ஆகவே, எக்காரணத்தைக் கொண்டும் நீர் என்னைத் தடுப்பதும், வந்த வழியே திரும்பிப் போகும்படி கட்டளையிடுவதும் பொருத்தமாகாது.

“ஆனால், பெரிய மகானாகிய தங்களுக்கு ஓரளவு அமைதி தரக்கூடிய ஓர் ஏற்பாட்டுக்கு நான் ஒப்புக் கொள்கிறேன். மக்கத்தில் நான் சென்று இத்தனை பேரைத்தான் கொல்லலாம் என்று வரையறை செய்து தாங்கள் ஒரு கட்டளையிடுங்கள். அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவதாக நான் அல்லாவின் பேரால் ஆணையிட்டுக் கூறுகிறேன்” என்று கூறியது வாந்திபேதிப் பேய்.

வேறு வழியில்லை என்று கண்ட பக்கிரி இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொள்ளவேண்டியதாயிற்று. அவர் அந்தப் பிசாசைப் பார்த்து இவ்வாறு கூறினார். “சரி நீ போ. அங்கே இலட்சக்கணக்கான மக்கள் வந்திருப்பார்கள். அங்கே நீ ஒரே ஒராயிரம் பேரை மட்டும் கொல்ல நான் அனுமதிக்கிறேன். அதற்குமேல் ஓர் உயிரைக் கூட தீண்டலாகாது. மீறினால் நான் உன்னைச் சும்மா விட மாட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழாவது_வாசல்.pdf/58&oldid=994034" இலிருந்து மீள்விக்கப்பட்டது