பக்கம்:மாயக் கள்ளன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 பசுவைத் தின்னத் தொடங்கியதும் அவன் துப்பாக்கியை நீட்டினான். குறி வைத்துச் சிங்கத்தைச். சுட்டான், 'படார்' என்று துப்பாக்கி வெடித்தது. சிங்கத்தின் மார்பில் குண்டு பாய்ந்தது. ஆனால், சிங்கம் சாகவில்லை. அது கோபத்தோடு அண்ணாந்து பார்த்தது. அதனுடைய கண்கள் இரண்டும் தீப் பந்தங்கள் போல ஜொலித்தன. அது மரத்தின்மீதிருந்த வேட்டைக்காரனைப் பார்த்துவிட்டது. உடனே பெரிய கர்ஜனை செய்துகொண்டு அவன்மேல் பாய்ந்தது.

வேட்டைக்காரன் மறுபடியும் குறி வைத்துச் சுட்டான். இந்தத் தடவை குண்டு சிங்கத்தின் நெற்றியிலே பாய்ந்து, மூளைக்குள் புகுந்தது. சிங்கத்திற்கு ஒரே அதிர்ச்சி ஏற்பட்டது. அதன் உடம்பெல்லாம் நடுங்கிற்று. ஆனால், சிங்கம் பயப்பட வில்லை. கோபத்தால் கண்களை மூடிக்கொண்டு வேகமாக முன்னால் பாய்ந்தது. மரத்தின்மீது தாவ அதனால் முடியவில்லை. குண்டு தலையில் பாய்த்த சிங்கத்து வேகம் ந்து போயிற்று. இருத்தாலும், அதன் கோபம் மட்டும் தணியவில்லை. ஆதலால், மாக.-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/20&oldid=1276960" இலிருந்து மீள்விக்கப்பட்டது