பக்கம்:மாயக் கள்ளன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 ‘முதலையாரே, முதலையாரே, இந்த ஓடத்தைக் கொஞ்சம் தள்ளிவிடு.' 'நீ யார்? நீ எங்கே போகிறாய்' ‘நான் தான் கிழக் குள்ள நரி; மாமியார் வீட்டுக்கு விருந்து சாப்பிடப் போகிறேன்.'

  • எனக்கென்ன கொண்டுவருவாய்?'

'உளுந்து வடை ஒரு கூடை, ஓமப்பொடி ஒரு கூடை; தயிர் வடையும் ஒரு கூடை; சர்க்கரைப் பொங்கலும் ஒரு கூடை.

முதலை வாயைச் சப்பிக்கொண்டது. “சரி, போய் வா' என்று சொல்லித் தன் நீண்ட வாலால் தள்ளிவிட்டது. ஓடம் வேகமாகச் சென்று அக்கரைக்குப் பக்கமாகவே போய்விட்டது. ஆனால், இன்னும் கரை சேரவில்லை. அங்கே ஒரு பாறைமேல் ஒரு குள்ள நரி உட்கார்ந்து, நண்டு பிடித்துக் கொண்டிருந்தது. • நரியாரே, நரியாரே, ஓடத்தைக் கொஞ்சம் தள்ளிவிடு.' ‘நீ யார்? நீ எங்கே போகிறாய்?" ‘நான் தான் கிழக் குள்ள நரி; மாமியார் வீட்டுக்கு விருந்து சாப்பிடப் போகிறேன்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/104&oldid=1277019" இலிருந்து மீள்விக்கப்பட்டது