பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலையெழுத்து

51


நடத்தை குழந்தைகளைப் பாதிக்கின்றது என்ற மனத்தத்துவ உண்மையை அடிப்படையாகக் கொண்டது.

ஒருவன் தான் எண்ணுவது போலவே ஆகிவிடுகிறான் என்று சொல்லுகிறார்கள். உயர்ந்த எண்ணங்களையே எண்ணிக் கொண்டிருப்பவன் வாழ்க்கையில், உயர்வடைவான். எண்ணத்தின் வலிமையை இன்று அறிஞர்கள் உணர்ந்து வருகிறார்கள். எண்ணியார் எண்ணியாங் கெய்தலாம் என்ற உறுதியைச் சாதாரணமாகத் தலைவிதி என்ற எண்ணம் குலைத்து விடுகிறது. எவ்வளவு வேகமாக எண்ணினாலும், முயன்றாலும் தலைவிதிப்படித்தானே முடியும் என்று உள்ளம் சோர்வடைகிறது. ஆனால், விதியென்பதை உள்ளபடி நாம் அறிந்துகொண்டோமானால் சோர்வும் அவநம்பிக்கையும் பிறக்க முடியாது.

உலகத்தில் போர், பூசல் முதலிய துன்பங்கள் நேர்கின்றன. அவற்றால் தனி மனிதர்கள் பலர் துன்பப்படுகிறார்கள். பலர் இறக்கிறார்கள். இவற்றிற் கெல்லாம் அவர்கள் காரணமாக இருக்கவில்லையே என்ற ஐயமுண்டாகலாம். மனிதன் தன் செய்கையாலேயே இன்பதுன்பங்களையும், உயர்வு தாழ்வுகளையும் அடைகிறானென்றால் பெரும் போரால் நேரும் பலனுக்கு அவன் செய்கை எவ்வாறு காரணமாகுமென்று வினவலாம். போரால் துன்புறுவதும் மடிவதும் தலையெழுத்தல்லவா என்றும் கேட்கலாம். இவ்விஷயத்தை நாம் சற்று ஆழ்ந்து ஆய்ந்து பார்க்க வேண்டும். மனிதன் மற்ற மனிதர்களோடு கூடி வாழ விரும்புகிறான். அப்படி வாழும்போது நாடு முதலிய