பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியின் நகைச்சுவை

39


நகைச் சுவை ஆங்காங்கு மின்னுவதை நாம் பார்க்கலாம்.

அங்காந்திருக்கும் வாய் தனிலே-கண்ணன்

ஆறேழு கட்டெறும்பைப் போட்டுவிடுவான்

என்ற கண்ணன் பாட்டிலும்,

மேனி அழகினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனி இருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே

வானரர் தம்சாதிக்கு மாந்தர் நிகராவாரோ

என்ற குயிற் பாட்டு வரிகளிலும் நகைச்சுவை கொப்புளிக்கின்றது.

பாரதியாருடைய நகைச் சுவையை உணர்ந்து மகிழ அவருடைய வசன நூல்களுக்குத்தான் முக்கியமாகச் செல்லவேண்டும்; அங்குதான் அது சிறப்பாக வெளிப்படுகின்றது.

நகைச் சுவையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று என்றும் சிரிப்பை உண்டாக்கி இன்பம் பயப்பது; மற்றொன்று முதல் தடவை படிக்கும் போதோ அல்லது கேட்கும் போதோ மட்டும் இன்பங் கொடுப்பது. முன்னது உயர்த்தது; பின்னது தகுதியில் குறைந்தது. முன்னது இடையறாது பெருகும் தேன் ஒழுக்கு; பின்னது துளிக்கும் கொம்புத் தேனில் ஒரு சொட்டு. பாரதியாரின் கட்டுரைகளில் இடையறாத இன்ப ஊற்றான உயர்ந்த நகைச் சுவையை நாம் ஆங்காங்கு காண்கின்றோம்.

பெண் என்ற கட்டுரையிலே பிரமராய வாத்தியாரைப் பற்றி அவர் சொல்லுவதைப் பாருங்கள்;