பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

காட்டு வழிதனிலே

பிரிவினைகளும், வேறு வேறான ஆட்சி முறைகள் முதலியனவும் உண்டாகின்றன. மனிதன் தனியாகச் செயலாற்றுவதோடு மற்றவர்களுடன் சேர்ந்தும் பல செயல்கள் செய்கிறான். அவ்வாறு தன் நாட்டிற்காகவும் சமூகத்திற்காகவும் நேரடியாகவோ தன் பிரதிநிதிகளின் மூலமாகவோ செயல் புரிவதிலே வழியல்லா வழியில் செல்லுவதாலேயே போர் ஏற்படுகின்றது. போரென்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியால் உண்டாவதில்லை. மனிதன் தனக்காக ஏற்படுத்திக் கொண்ட சமூக, அரசியல், பொருளாதார அமைப்புக்களின் விளைவாகவே போர் ஏற்படுகிறது. அவனுடைய குறுகிய நோக்கமும், சுயநலமும், பேராசையும் போருக்கு வழி செய்கின்றன. அப்போரையும் மனிதன் தன் முயற்சியால் தடுக்கக் கூடும். ஆதலால் தலையெழுத்தென்று சொல்லிக் கொண்டு 'வருவது தானே வரும்; போவது தானே போகும்' என முயற்சியின்றி இருத்தல் தவறாகும். தலையில் ஒருவித எழுத்தும் இல்லை; ஒவ்வொருவனும் தானே தன் தலையெழுத்தைத் தன் செயல்களால் எழுதிக் கொள்ளுகிறான்.