பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

காட்டு வழிதனிலே

கைத் தொல்லைகள் அனைத்தையும் மறந்துவிட்டுக் கவிதையை மட்டும் மறவாதிருக்கவேண்டும். ஏனெனில் கவிதைதான் இயற்கைக் கன்னியோடு நம்மைச் சேர்த்து வைக்கும் இன்பத் தோழியாகும்.

கவிதையும், காட்டுத் தனி வழியும் மனிதனை உயர்த்தும் ஆற்றல் வாய்ந்தவை. மக்களின் இன்றைய வாழ்க்கையில் எழுந்துள்ள இடர்ப்பாடுகளைக் களைந்தெறிவதற்கு இடையூறாக நிற்கும் குறுகிய தந்நல நோக்கத்தை மாற்றிப் பரந்த மனப்பான்மை கொள்ள அவை உதவுகின்றன. அவற்றை நாம் ஒரு நாளும் புறக்கணிக்கலாகாது.