பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதம் தேவையா?

75


எண்ணவும் தலைப்பட்டுவிடுவார்கள். அது முடிவில் தம் சுகத்தையே நாடும் விலங்கு நிலைக்கு இழுத்துச் சென்றுவிடும். அதனால்தான் ஒரு பெரியார் கூறுகிறார்: "மக்கட் சமுதாயத்திலிருந்து மதத்தை அகற்றிவிட்டால் அது விலங்குக் கூட்டமாக முடியும்." நீதி நெறிகளால் உலகத்தில் எல்லாவிதமான உயர்வு தாழ்வுகளும் நீங்கலாம்; எல்லோருக்கும் சுகங் கிடைக்கலாம். ஆனால், அவ்வாறேற்பட்ட வாழ்க்கையில் முழு மன நிறைவு ஏற்படுமென்று சொல்ல முடியாது.

உலக இன்பங்கள் எல்லாவற்றையும் பெற்று வாழக்கூடிய நிலையில் பலர் இன்று இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்க்கையில் முழு மனநிறைவு கிடைத்து விடுகிறதில்லை. பெறுவதற்கரிய ஏதோ ஒன்றை விரும்பி மனித உள்ளம் ஏங்கிக் கொண்டிருக்கிறது. அதை உலகத்திலுள்ள எந்த இன்பப் பொருளிலாவது பெற முடியுமா என்று தேடித் தேடி அலைந்து ஏமாற்றமடைகின்றது. அந்த நிலைத்த இன்பத்தை அளிக்கத்தான் மதம் முன்னிற்கிறது. கடவுட் கொள்கையில்லாத தன்னெறி வாழ்க்கை உலக இன்பங்களை நல்கலாம்; ஆனால் மதமானது அவற்றோடு நிலைத்த இன்பத்தையும் மன நிறைவையும் தரக்கூடிய உயர் நெறியைக் காட்டுகிறது. ஆகையால்தான் மதம் தேவை என்று கூறுகிறோம்.

மதத்தின் பெயரால் பல சிறுமைகள் நடக்கலாம். ஆனால், அவற்றிற்காக மதத்தையே புறக்-