பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

காட்டு வழிதனிலே

காட்டு வழிதனிலே எடுக்கப் போனால் கையில் ஒட்டிக்கொள்ளும்; அக்கையை விடுவிக்க மற்றொருகையை பயன்படுத்தினால் அதில பிடித்துக் கொள்ளும். விடவே விடாது. அதை ஒத்தவர்கள் இந்த மனிதர்கள்.

இயற்கை இன்பத்தைச் சுவைப்பதற்குப் புள் விலங்களும், மரஞ்செடி கொடிகளும், மலர்களும், ஓடைகளும், குன்றுகளுமே ஏற்றவை. மனிதன் மட்டும் இயற்கைக்குப் புறம்பானவனா, அவனும் இயற்கையில் ஒரு பகுதிதானே என்று நீங்கள் கேட்கலாம். அவன் புறம்பானவன் என்று நான் கூறவில்லை. ஆனால், அவன் தனது செயற்கை வாழ்க்கையால் தன்னை அப்படிச் செய்து கொள்ளுகிறான் என்பதே என் குற்றச்சாட்டு. அவன் தனியாகத் தினமும் ஒரு நாழிகைப் பொழுதாவது தன் நாகரிகச் செயற்கை வாழ்க்கையை மறந்து இயற்கையோடு அமைதியாக ஒன்றியிருந்தால்தான் அவனுக்கு உய்வு பிறக்கும்-அவனே இன்று எதிர்த்து நிற்கும் துன்பங்கள் ஒழியும் என்பது என்னுடைய திடமான நம்பிக்கை.

ஓடுகின்ற ஊற்று நீரிலே உயர்ந்த அறிவு நூல்களைக் காணலாம் என்று ஆங்கிலக் கவிஞன் ஒருவன் தந்து கூறியதில் உள்ள உண்மையை இயற்கையோடு நட்புரிமை பூண்டு தனியாக உறவாடியவர்களே அறிவார்கள்.

நான் நத்தை நண்பர்களுக்கெல்லாம் தப்பித்துக் கொண்டு காட்டு வழியிலே எங்கே போகிறேன் என்கிற எண்ணமே இல்லாமல் அன்று நடந்துகொண்டிருந்தேன். மேல் வானத்தை முத்தமிட்டுக்