பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

காட்டு வழிதனிலே


நிப்பான் வடிவிற் சிறியது; ஆனால் அழகில் பெரியது; நீலக் கடலின் மேனியிலே திகழும் வெண்முத்துப் போன்றது. அவ்வாறே அந் நாட்டு இலக்கியத்தின் பரப்பிலே வடிவில் சிறுத்து அழகில் பெருத்த கவிதை மகள் மலிந்திருக்கின்றன. கவிதை எழுதுவது அங்கே பலருக்கு ஒரு முக்கியமான இன்பப் பொழுது போக்காகும். ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் அவ்வாறுதான். கவி புனைவதில் பந்தயங்களும் போட்டி விளையாட்டுக்களும் அங்கே சாதாரண நிகழ்ச்சிகள், கலிதைக்கென்றே நூற்றுக் கணக்கான சிறந்த பத்திரிகைகள் அங்கு நடத்தப்படுகின்றன.

நிப்பான் நாட்டுக் கவிதைகளிலே 'தங்கா' என்ற யாப்புப் பலராலும் போற்றப்படுவதாகும். அதில் இலட்சக்கணக்கான கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. இச்சிறு யாப்பு பன்னிரண்டு முதல் இருபது வரையுள்ள சொற்களாலேயே ஆனது; ஐந்தே வரிகளையுடையது. அவ்வரிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து, ஏழு, ஏழு அசைகள் தாம் உண்டு. பொதுவாக உதயச் சுடர் நாட்டு யாப்புக்களில் சீர், எதுகை, மோனை முதலான உறுப்புக்களில்லை. 'தங்கா'விலும் அவ்வாறு தான். நிப்பான் மொழியே இசையினிமை கூடியதாதலின் அனவே கவிதையின் உனர்ச்சியை வெளிப்படுத்தப் போதுமானதாக இருக்கிறது.

தங்கா' ஒவ்வொன்றும் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சியில் செதுக்கி எடுக்கப்பட்ட சிறுமணியாகும். அது உருவத்தில் சிறியதெனினும் பொருள்