பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

காட்டு வழிதனிலே


பான்மை அழைத்திருக்கிற தென்றும், அவைகள் மலர்வதற்கு வசதியான சூழ்நிலை கிடைத்தால் வளருமென்றும், கிடைக்காவிட்டால் நைந்து போகுமென்றும் மசாத்தத்துவர்கள் கருதுகிறார்கள். மேலும் ஒருவனுடைய வாழ்க்கையமைப்பு அவனுடைய ஐந்தாவது வயதிற்குள்ளேயே பாரம்பரியத்தாலும், சூழ்நிலை அநுபவங்களாலும் பெரும்பாலும் திட்டமடைந்து விடுகின்றதென்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆதலால் ஒருவனுடைய தலையெழுத்தை உருவாக்குவதில் பெற்றோருக்குப் பெரியதோர் பங்கு இருப்பதாகத் தெரிகின்றது. இந்த வகையிலே பார்க்கும்போது பெற்றோர்களின் பொறுப்பு மிகப் பெரியதென ஏற்படுகிறது. பாரம்பரியத் தன்மைகளை அவர்கள் தங்கள் விருப்பப்படி முற்றிலும் செய்ய முடியாவிட்டாலும், தகுந்த சூழ்நிலையை உண்டாக்கி அதன் மூலம் சிறந்த பண்புகளையும், திறமைகளையும் வளர்க்கலாம். பெற்றோர்கள் தங்கள் நடத்தையாலும், செயலாலும் குழந்தைகளுக்கு நல்ல எடுத்துக் காட்டாக இருக்கலாம். ஒருவன் தனக்கு நல்ல அறிவிருந்தும் வாழ்க்கையிலே வெற்றி பெற முடியாதிருப்பதற்கு என்ன காரணம் என்று ஆராயும்போது தன் தந்தை காமவசப்பட்டு இழிந்த செயல் புரிந்து வந்தாரென்றும், அதன் பயனாகப் பாரம்பரியமாகத் தன் மூளையில் ஏற்பட்டிருக்கும் கோளாரென்றால் தன்னுடைய அறிவு சிறப்பாகப் பயன்படாதிருக்கின்றதென்றும் உணர்ந்ததாக ஐரோப்பிய நாடகமொன்று எழுதப்பட்டிருக்கிறது. இது பெற்றோர்களின்