பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்திய அடிப்படை

31

கிறது. மற்றொரு யுத்தமென்றால் அது அணுக்குண்டுயுத்தந்தான்; அணுகுண்டு யுத்தமென்றால் அதுவே மானிட சாதியின் அழிவாகவும் முடியலாம்.

இந்த நிலைமையிலிருந்து தப்ப வேண்டுமானால் காந்தியடிகள் காட்டிய ஒரே வழிதான் உண்டு. இதை நன்கறிந்துள்ள பேரறிஞர் ஐன்ஸ்டைன் விடுத்துள்ள சேதியொன்றில், “அப்பொழுதே உணரமற் போனோமே என்று வருந்தும் நிலை ஏற்படுவதற்கு முன்பே உலகம் காந்தியடிகளின் வழியைப் பின்பற்றி உய்வடைய வேண்டும்” என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்.

அதற்கு நம் மனப்பான்மையிலேயே ஒரு புரட்சிகரமான மாறுதல் ஏற்பட வேண்டும். பழைய வழியிலேயே எண்ணுவதை அறவே விட்டொழித்து மானிட சமூகம் ஒரு குடும்பம் என்ற அடிப்படையில் நம் சிந்தனையைச் செலுத்தவேண்டும். அதிகார ஆசையில் உழலும் உலகத்து அரசியல்வாதிகளை இன்று அப்படி மாற்றிவிட முடியுமென்று தோன்ற வில்லை. இனிமேல் நாட்டு மக்களாக நின்று பொறுப்பேற்க வரும் இளைஞர்களுக்கு இப்புது வழியில் மனம் செல்லும்படியான படிப்பு முறை அவசியம். உலகைக் காப்பதற்கு இதுவே இன்று மிக விரைவாகச் செய்யப்படவேண்டிய காரியமாகப்படுகிறது.

அறிவு என்பதொன்று மனிதனுக்குத் தனிச் சிறப்பாகக் கிடைத்திருக்கிறது என்பது மெய்யானால் அதைப் பயன்படுத்தி, காந்தியடிகளின் உபதேசத்தை