பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலையெழுத்து

49

இவையெல்லாம் மனத்தித்துவர்கள் தங்கள் ஆராய்ச்சியின் பயனாகக் கண்டறிந்த உண்மைகள். இவற்றின் மேல் ஒருவனுக்கு ஆதிக்கம் இல்லையாகையால் ஒவ்வொருவனும் தன் வாழ்க்கையமைப்பைத் தானே திட்டமிடுவதாக. எப்படிக் கூற முடியும் என்று கேட்கலாம். பாரம்பரியத்தைத் தானாகவே ஒருவன் உண்டாக்கிக்கொள்ள முடியாதென்பது மெய்தான். குழந்தைப் பருவத்தில் ஒருவனுக்குத் தன் விருப்பப்படி சூழ்நிலையை அமைத்துக்கொள்ளவும் முடியாது.

இங்ஙனம் ஏதாவது ஒரு பிறப்பில் ஒருவனது கட்டுக்கடங்காது நிற்பவைகளை வேண்டுமானால் தலையெழுத்து என்று சொல்லலாம். இங்கு நான் தலையெழுத்தையும் விதியையும் வெவ்வேறு பொருள்களில் வழங்க விரும்புகிறேன். விதியென்பது முன்பே கூறியதுபோல ஒரு நியதி; செய்த வினையின் பயனாக உண்டாவது. தலையெழுத்தென்பது தன்னை மீறி ஏற்பட்ட பாரம்பரியம், இளமைச் சூழ்நிலை போன்றது. தனது வினைக்கு ஒருவன் பொறுப்பாளியாயிருப்பது போல இவற்றிற்கு அவன் அந்தப் பிறவியில் பொறுப்பாளியாக இருக்க முடியாது. ஆனால், ஒருவகையான பாரம்பரியத்தையும், சூழ்நிலையையும் அடையும்படியாக ஒருவன் பிறப்பதற்கே காரணம் அவன் முற்பிறப்பில் செய்த வினையென்று வாதிப்பவர்களும் உண்டு. அது மெய் யென்றால் எனது கட்சி முற்றிலும் வலுவடைகின்றது.

பாரம்பரியத்தினால் ஒரு சில தன்மைகளையும் திறமைகளையும் பெறுவதற்கு வேண்டிய மனப்