பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறுபாணாற்றுப் படை


“எனக்குத் தீராத தலைவலி ஏற்பட்டிருக்கிறது. என்ன செய்வதென்றே தோன்றவில்லை” என்கிறான் ஒருவன்.

“தலைவலியா? பாலக்காட்டிலே ஒரு மருத்துவன் இருக்கிறான். அவனிடம் போனால் ஒரே நாளில் குணப்படுத்திவிடுவான். அவனைக் கண்டாலே தலை வலியெல்லாம் பறந்துவிடும்” என்கிறான் தானே அத் துன்பத்தில் உழன்று உண்மை அறிந்த மற்றொருவன்.

இவ்வாறு கூறி அவன் தலைவலியால் துன்புறுபவனே மருத்துவனிடம் வழிப்படுத்துகிறான்.

இந்த உரையாடலிலிருந்து இரண்டு கருத்துக்கள் தெளிவாகின்றன. நோய்க்கு நல்ல மருந்து கிடைக்கும் இடம் தெரிகின்றது; அந்த மருந்தை உதவிடும் மருத்துவனுடைய திறனும் புகழும் வெளியாகின்றன. இவ்வாறு தமக்குத் தெரிந்தவற்றைப் பிறருக்கு வெளிப்படுத்தும் இப் பழக்கம் மக்களிடையே இயல்பாக எங்கும் காணப்படுகிறது.

இதை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது ஆற்றுப்படை என்ற நூல்வகை. தீராத வறுமையாலோ அல்லது வேறு துன்பத்தாலோ துயருறும் ஒருவனே அதைத் தீர்க்கக்கூடிய ஒருவனிடம் வழிப்படுத்துவதுதான் ஆற்றுப்படை.