பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

திரும்புவேன் என்று சொல். நீ இங்கேயே இரு. எங்காவது வேடிக்கை பார்க்கப் போய்விடாதே" என்று கூறிவிட்டு, காரில் ஏறிக்கொண்டு புறப்பட்டாள். கார் ஓட்டத் தெரிந்திருந்தது இந்தச் சமயத்தில் அவளுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது.

முதலில் அவள் கோயிலுக்குச் சென்று அங்காளம்மனைத் தரிசித்துக்கொண்டாள். பிறகு, திருவிழா பந்தோபஸ்திற்காக வந்திருந்த போலீஸ் இலாகாவினர் தங்கியிருந்த முகாமிற்குச் சென்றாள். அங்கே ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இருந்தார். அவருடன் வள்ளிநாயகி தனித்துப் பேசி நிலைமையை விளக்கினாள். போலீஸ் இன்ஸ்பெக்டர் உடனே செயலில் இறங்கினார். முதலில் பரிசல் தள்ளுவதில் வல்லவர்களான இரண்டு பேரை ஏற்பாடு செய்து அவர்களோடு மூன்று போலீஸ் ஜவான்களையும் ஒரு பரிசலில் ஏற்றி அனுப்பினார். "அந்தக் குழந்தைகள் ஏறியுள்ள பரிசலைக் கண்டுபிடித்து அவர்களை உங்களுடைய பரிசலிலேயே அழைத்துக்கொண்டு கூடல் பட்டணம் போய்ச் சேருங்கள். அதற்குள் நாங்களும் தரை மார்க்கமாக அங்கு வந்து சேருவோம்" என்று கூறிவிட்டு அவர் பரிசலை வேகமாக விடுமாறு ஆணையிட்டார்.

பிறகு, வள்ளி நாயகியின் யோசனைப்படி சிலரைக் கொல்லிமலைக் குள்ளனைப்பற்றி அறிந்துகொள்ளவும் பேராசிரியர் வடிவேல் இருக்குமிடத்தை அறியவும் ஏவி விட்டார். அவரும் வள்ளிநாயகியோடு காரிலே புறப்பட்டார். நான்கு போலீஸ் ஜவான்களும் துப்பாக்கிகளுடன் உடன் சென்றனர்.


8

ரவு எட்டு மணி சுமாருக்கு வடிவேலும் குழந்தைகளும் திரும்பி வந்துவிடுவார்கள் என்று கொல்லிமலைக் குள்ளன் வள்ளிநாயகியிடம் தெரிவித்திருந்தானல்லவா? அதன்படி அவர்கள் வராததால் அவள் கவலைப்பட்டுப் போலீசுக்குத் தகவல் கொடுத்துவிடுவாளோ என்று குள்ளன் ஐயம் கொண்டான்.