பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

பரிசலென்றும் அவனுக்குத் தெரிந்தது; அது அவனுக்கு மேலும் ஆச்சரியத்தையும், திகைப்பையும் உண்டாக்கிற்று.

அதனால் தான் அவன் தன் ஆள்களை அங்கேயே இருக்கும்படி செய்துவிட்டு, நூலேணி வழியாக மலைக்கு மேலே வந்தான். தில்லை நாயகம் சமையல் செய்யும் குகையில் யாருமில்லாததைக் கண்டு அவன் தனது ரகசியக் குகையை நோக்கி வேகமாகப் புறப்பட்டான். அப்படிப் புறப்பட்டு வந்துதான் அவன் தங்கமணி முதலியவர்களை உட்குகையில் கண்டான். பின்பு அவன் மூர்ச்சையுற்று விழுந்ததுவரை நடந்த நிகழ்ச்சிகளை முன்னமேயே அறிவோம்.


18

கொல்லிமலைக் குள்ளன் நீண்ட நேரம் மூர்ச்சையுற்றுக் கிடக்கவில்லை. முகத்திலிருந்து வழிந்த ரத்தத்தாலும், அடிபட்ட அதிர்ச்சியாலும் அவன் சிறிது நேரந்தான் உணர்வற்றிருந்தான். பிறகு, அவனுக்கு மெதுவாகத் தன் நினைவு வந்தது. தரையில் படுத்துக்கொண்டே அவன் நெற்றியிலும் கன்னத்திலும் வழிந்து உறைந்து இருந்த ரத்தத்தைக் கையால் துடைத்துக்கொண்டான். அவனுடைய ஜிப்பாவின் கழுத்துப் பக்கத்திலெல்லாம் ரத்தம் படிந்து ஈரமாக இருப்பதை உணர்ந்தான். மூக்கின் இருபுறங்களிலும் நல்ல காயம் ஏற்பட்டிருந்தது. நெற்றியின் மேலே அவன் மெதுவாகத் தடவிப் பார்த்தான். அங்கேயும் காயம் இருந்தது. காயங்களிலிருந்து ஒருவகை வலி உண்டாயிற்று. அவன் அதைச் சமாளித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். அந்த இடத்திலிருந்து தப்பிப் போகவேண்டியது உடனடியாகச் செய்ய வேண்டிய வேலையென்று அவனுக்குப் பட்டது. உடனே அவன் குகையினுள் தண்ணீர் கசிந்து வருகின்ற சுரங்க வழியைத்தான் முதலில் நினைத்தான். கதவை நன்றாக வெளியில் சாத்திக் குறுக்குச் சட்டத்தைப் போட்டிருப்பார்களென்று அவனுக்குத்