பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7


விழுந்து வணங்கு, உன்னை மன்னித்துவிடுகிறேன். இனிமேல் தற்பெருமை பேசாதே!" என்று கூறியது பனிக்கட்டி!

"நான் தான் பெரியவன்! நீ தான் என்னை வணங்க வேண்டும்” என்றது காற்று.

"இல்லை யில்லை. நீ தான் என்னை வணங்க வேண்டும். பேசாமல் அடங்கிப் போ” என்றது பனிக்கட்டி.

இப்படி நெடுநேரம் இரண்டும் நான் தான் வலுவானவன். நான் தான் பெரியவன் என்று மாறி மாறிக் கூறிக் கொண்டிருந்தன.

கடைசியில் காற்று சொன்னது!

"நாம் வாதாடிக் கொண்டிருப்பதில் பயனில்லை. பகலவனிடம் போவோம். அவன் யார் பெரியவர்-வலுவானவர் என்று தீர்ப்புக் கூறட்டும்” என்று கூறியது.

பனிக்கட்டியும் ஒப்புக் கொள்ளவே இரண்டும் பகலவனிடம் சென்றன.

"கதிரவனே! உண்மையைச் சொல். நான் தானே வலுவானவன்?’ என்று கேட்டது காற்று.