பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

ணர்ச்சி- அறியாமையால் ஏற்படலாம். அல்லது தம்மை அறியாமலேயே பெற்றோர்கள் இவ்வெறுப்புணர்ச்சியைக் கொண்டிருக்கலாம்.

இங்ஙனம் உண்டாகும் வெறுப்புணர்ச்சியைப்பற்றி விரிவாக ஆராய்ந்த பிட்ஸ் சைமன் (Fitz Simon) என்பார் அது சாதாரணமாக எவ்வாறெல்லாம் நடத்தையில் வெளியாகிறது என்பதை வகுத்துக் கூறியிருக்கின்றார்.

குழந்தையிடம் குறைபாடுகளேயே காணுதல் கடுமையான தண்டனை கொடுத்தல்
பயமுறுத்துதல்
பூட்டி வைத்தல்
பழித்துப் பேசுதல்
சிறிது நேரங்கூட அன்போடு பேசாதிருத்தல்
இஷ்டம்போல எங்கு வேண்டுமானலும்
திரியும்படி விட்டுவிடுதல்
மற்றக் குழந்தைகளோடு ஒத்திட்டு இழிவு படுத்துதல்
எதிர்பார்க்க முடியாத செயல்களை எதிர்பார்த்தல்
பேணுது விடுதல்
வீட்டைவிட்டுத் துரத்துதல்

என்று இப்படிப் பலவேறு வகைகளில் அந்த வெறுப்பானது வெளிப்படுகின்றது. இவ்வாறு ஏதாவது ஒரு வகையில் கடந்து கொள்ளும் சில பெற்ரறோர்கள் தங்கள் நடத்தையில் வெறுப்புணர்ச்சி இருக்கிறதென்றும் அது குழந்தையைப் பாதிக்கிறது என்றும் அறியாமலும் இருக்கலாம்.

வெறுப்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் சாதாரணமாகக் கீழ்க் கண்ட தன்மைகள் காணப்படுகின்றன.