பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நாச்சியப்பன் முழுவதையும் படித்துப் பார்த்து அவற்றின் சாறுகளை யெல்லாம் பிழிந்து தந்திருக்கிரு.ர்கள். வாழும் நக்கீரர்; பிழைபொருத நெஞ்சினர்; தவறில்லாத நூல்களே வெளி வர வேண்டும் என்ற சீரிய கொள்கையினர், இந்நூலில் ஏற்பட்ட சில தவறுகளைச் சுட்டிக் காட்ட அவர் தவறவில்லை. அவற்றைப் பிழைதிருத்தம் என்ற தலைப்பில் இறுதிப் பக்கத் தில் வெளியிட்டிருக்கிறேன். டாக்டர் தா. வே. வீராசாமி அவர்கள் இலக்கியத் திறய்ைவு உலகத்தில் தனியிடம் பெற்றுத் திகழ்பவர்கள். பழந்தமிழ் இலக்கியங்கள் மட்டு மல்லாது அண்மைக் காலத் தில் அன்றன்று பூத்துவரும் புதுமலர்களையும் ஆய்ந்து, திறன்காட்டி மகிழும் செந்தமிழ்ப் பேராசிரியர். எதையும் நுட்பமாகப் பார்த்து,செவ்விய தீர்ப்பு வழங்கும் திறனுடை யார். அவர்களுடைய தெளிவுரையையும் பெறும் பெருமை பெற்றுள்ளது இந்நூல். டாக்டர் ந. வீ. செயராமன் அவர்கள் கோவை, தமிழ் நாடு வேளாண் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர். இலக்கிய நூல்கள் பலவற்றை விளக்கங்களோடு பதிப்பித்து தமிழ்ப்பணி புரிந்துவரும் தமிழன்பர்.ஆய்வுக் கண்ணுேட்டத் துடன் இந்நூலினைப் படித்து அரியதோர் கட்டுரையினை வழங்கியிருக்கிரு.ர்கள். சென்னை அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திருமதி சு. இராசலட்சுமி இராமச்சந்திரன் அவர்கள் செந்தமிழ்ச் சுவையில் ஊறித் திளைத்தவர்கள். தம்மிடங்கற்பாரையெல்லாம் தமிழ்ப்பற்றுடையவராக்கும் பெரும்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள். அவர்கள் இந்நூலின் ஒவ்வொரு வரியையும் படித்துச் சுவைத்து இதன் சாரத்தை யெல்லாம் வடித்துக் கொடுத்திருக்கிரு.ர்கள். மருதூர் ச. அரங்கராசன் அவர்கள் ஆசிரியராகவும் மாணவராகவும் திகழும் அரிய நிலையினர். நுண்ணிதின்