பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடை தெரியவில்லை டாக்டர் க. ப. அறவாணன் ஆப்பிரிக்க அடிப்படை ஆய்வகம், தக்கார் பல்கலைக் கழகம், தக்கார், செனகால். கவிஞர் நாரா நாச்சியப்பர் கவிதைக்கு-கவிதைக் காதைக்கு ஒரு திறனாய்வு எழுத வேண்டும் என்று கேட்ட உடனே ஒப்புக் கொண்டேன். முதற் காரணம்: அவர் மீது எனக்குள்ள மதிப்பு. இரண்டாவது: அவர் எழுத்தில் எனக்குள்ள மதிப்பு! ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அவர்தம் எழுத்துகள் தமிழை அணி செய்து வருகின்றன. அவர் கைப்பட்டு வெளிவந்த இதழ்கள் பல! அவர் விழிப் பார்வையில் வெளிவந்த நூல்கள் பல! அவர் எழுத்தில் இளந்தமிழனின் மான உணர்வும், பர்மாத் தமிழனின் கண்ணோட்டமும் எனக்குப் பிடித்த சிறப்புகள்! பிடித்த சிறப்புகளைக் கவிதைகளில் பிடித்து வைத்துப் படைப்பவரைப் படித்தவர்க்குப் பிடிக்கும் அல்லவா? அவர் கவிதைத் தொகுதியில் எல்லாவற்றையும் நான் படிக்கவில்லை. ஒரு கதைக் காவியத்தை முற்றுமாக-வரி வரியாக சொல் சொல்லாக எழுத்து எழுத்தாகப் படித் தேன். அதன் பெயர்: இளவரசி முல்லை. பக்கம் 135 இலிருந்து 191 வரை அது விரவி நிற்கிறது. 199 எண்சீர் விருத்தங்கள்; ஒரு வெண்பா. ஆக 200 பாடல்கள்! 800 வரிகள்; ஏறத்தாழ 8000 சொற்கள்! இந்த எல்லைக்குள் ஒர் இனிய கதை சொல்லி முடிக்கப் பெறுகிறது. கதை,