பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49


அரசரை நோக்கினாள். அம்மணக் கோலத்தில் அரசர் தேர்த் தட்டில் நிற்பதைக் கண்டாள்.

அவள் அரசரை நோக்கிக் கூவினாள். “வெட்கம் வெட்கம்! மன்னரே ஏன் அம்மணமாக இருக்கிறீர்கள் உங்கள் ஆடையெல்லாம் எங்கே போயிற்று” என்று கூச்சலிட்டுத் தன் கண்களை மூடிக் கொண்டாள்.

சுடர்க் கொடி அறிவுமிக்க குழந்தை என்பது அரண்மனை வாசிகள் எல்லாருக்கும் தெரியும். அவள் முட்டாள் தனமாகப் பேச மாட்டாள் என்பதும் தெரியும்! அவள் கூறிய உண்மையைக் கூறியதும் அங்கங்கே வீட்டு வாசல்களிலும் பலகணிகளிலும், உப்பரிகைகளிலும், வீதி ஓரங்களிலும், நின்று கொண்டிருத்த பெண்கள் கண்களை மூடிக் கொண்டு ஓடி ஒளிந்தார்கள்.

தம்மைத் தாமே முட்டாளாக எண்ணிக் கொண்டு அறிவாளிகளாக நடித்த ஆண்கள் உண்மையிலேயே முட்டாளாகிவிட்ட தங்கள் நிலையைக் கண்டு நாணித் தலைகுனிங்தார்கள்.