பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 33 உயர்வுக்கு வாதிடல்; தீமையைக் கலங்காது கண்டித்துக் கழறுதல்; நல்ல உவமைகளைக் கையாளுதல்; பெரும்பாலும் கதைப்பாங்காகவும் சிறிது காப்பியப் புனைவாகவும் பாட முயலுதல் ஆகியவை இந்நூற் சிறப்புகளாம். பாவலர் நாரா நாச்சியப்பனவர்கள் மருமக்கள் வழி மான்மியம்’ போல, சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ போல நல்ல நகைச்சுவை அங்கதங்களைப் படைக்க வேண்டும். அவர் பாட்டு இக்காலச் சமுதாயத்தைப் படம்பிடித்தாற் போல் காட்டவேண்டும். அத்தகைய வளர்ச்சியை இத்தொகுப்பில் காண்கின்ருேம்; இன்னும் நிரம்ப எதிர் பார்க்கின்ருேம். 13–5–1980 தமிழண்ணல்