பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

சென்றார்கள். முதலில் வரமறுத்த கிழவர், துணைக்கு ஐந்தாறுபேர் வருவதால் சிறிது மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு புறப்பட்டார்.

பேய்கள் பகலில் உச்சி வேளையிலும், இரவிலும் தான் நடமாடும் என்பது பழைய காலத்துக் கருத்து. செய்தியாளர்கள் ஏரிக்கரை போய்ச்சேரும் போது மாலை நேரம். எனவே இரவுவரும் வரை காத்திருந்தார்கள். இரவுநெடுநேரம் வரை காத்திருந்தார்கள். பேயைச் சுடுவதற்குச் சுழல் துப்பாக்கிகள், புகைப் படம் எடுப்பதற்குப் புகைப்படப் பெட்டிகள், அதன் குரலை ஒலிப்பதிவு செய்வதற்கு பதிவுநாடாக் கருவிகள் எல்லாம் கொண்டு போயிருந்தார்கள்.

நெடுநேரம் வரை எந்தப் பேயும் வரவில்லை. எனவே, செய்தியாளர்கள் ஒவ்வொருவராக ஏரிக் கரையில் தூங்கத் தொடங்கிவிட்டார்கள்.

கிழவர் மட்டும் விழித்துக் கொண்டிருந்தார். ஆனால், தரையில் படுத்துப் போர்வை-

பா-3