பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 எச்சரிக்கை விடுகின்ருர். 'உன்னல் செய்யக்கூடியது என்ன அதை முதலில் சொல். அடுத்த ஆண்டு கூடுவதற்குள் என்ன ர்ேதிருத்தங்கள் நடைமுறையில் கொண்டு வந்திருக்கிருய்' என்று கண்டிப்பாக ஆராய வேண்டும் என்கிருர் பாரதியார். வானத்தை வில்லாக வளைக்கலாம் என்று பேசிவிட்டு ஒன்றும் செய்யாமல் இருப்பவரை இவ்வாறு கிண்டல் செய்கிருர். பொதுவாகக் கூறுவோமானல் பாரதியாரிடம் உண்மை யான நகைச்சுவை மலிந்திருக்கிறது. இத்தனை துன்பங்களை அனுபவித்துக்கொண்டும் அவை நன்ருக யாவரும் என்றும் சுவைக்கும்படியாக வெளிப்படுகின்றன என்று சொல்லவே தோன்றுகின்றது. நகைச்சுவை அற்றவர் இந்தியர்கள் என்ற அவச் சொல்லையும் நீக்குவதிலும் முன்னேடியாக விளங்குகின்ருர் நமது மகாகவி பாரதியார். ம. ப. பெரியசாமித் தூரன்