பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 சேர்ந்தார். அந்த நம்பூரி இவரை நோக்கி, இடது சைர சிறுவிரலை நீட்டிக்கொண்டு, "பெயரென்ன?” என்று கேட்டார். "என் பெயர் நாணு என்று ஜனங்கள் சொல்லு வார்கள்' என்று நாராயணஸ்வாமி சொன்னர். "தீயர்களுக்குக் கோயில் கட்டிக்கொடுக்கும் ஸந்யாளி நீர் தானே?’ என்று நம்பூரி கேட்டார். "ஆம்" என்று ஸ்வாமி சொன்னர். 'பிராமண்t பிரதிஷ்டை செய்து பூஜிக்கவேண்டிய தெய்வத்தை, நீர் பிரதிஷ்டை செய்யும்படி உமக்கு யார் அதிகாரம் கொடுத் தார்கள்?' என்று நம்பூரி கேட்டார். அதற்கு நாராயணஸ்வாமி:- பிராமணர்களுடை சிவனை நான் பிரதிஷ்டை செய்யவில்லை. நான் பிரதிஷ்ம்ை. செய்தது தீயர்களுடைய சிவன். இதில் தாங்கள் வருத்தப் படவேண்டாம். தங்களுடைய சிவன் வழிக்கே நாங்கள் வரவில்லை' என்ருர். பாரதியாரும் ஆசார திருத்த மஹாசபையும் பாரதியார் ஆசார திருத்த மஹாசபையின் தீர்மானங் களைப் பற்றிப் பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கிருர், அரசியல் சீர்திருத்தம் வேண்டுமென்ருல், அ ந் நி1 அரசாங்கத்தாரிடமிருந்து எதிர்பார்க்க வேண்டும். ஆனல் சமூக சீர்திருத்தங்களுக்கு அவ்வாறு வேண்டியதில்லை. இந்தச் சீர்திருத்தங்களும் நடைமுறையில் கொண்டு வராததுபற்றி அவர் எள்ளி நகையாடுகிருர், அது பின்வரும் கட்டுரையால் வெளியாகின்றது. இப்போது நடைபெறும் 1920-ம் வருஷம் ஜூன் மாஸம் 22-ம் தேதியன்று தொடங்கி, அன்றைக்கும்