பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நாச்சியப்பன் கவிதையில் தமிழ் உணர்வு எல்லாப் பகுதிகளிலும் ஏறு நடை போடுகின்றது. சான்றாக : தோன்றும் மணியின் துணையானால் உம்பெண்ணும் ஆன்ற புலவர்களும் அன்புத் தமிழும்போல் ஊன்றி மணவாழ்வில் ஒற்றுமையாய் வாழ்ந்திடுவார் (பக் 12) கண்ணில் பதிந்தாள் கருத்தில் பதிந்துவிட்டாள் எண்ணக் கருவறையில் எங்கும் நிறைந்துவிட்டாள் (பக் 14) மொழிப்பற்றையும், கவிதைச் சிறப்பையும் நினைக்கும் போது கீழ்க்கண்ட வரிகள் நம்மைத் தட்டி எழுப்புகின்றன. தப்புச் சுதிசேர்த்துத் தாளந் தறிகெட்டுச் செப்பமில்லாப் பாப்பாடும் சீரற்ற பாடகன்போல் (பக் 16) ஒப்பனையும் பொய்நடிப்பும் உல்லாச மாய்நினைத்துக் கற்பனையும் தீதாய்க் கழிகின்ற பேர்வழிகள் - தன்மானங் கெட்டுத்தந் தாய்நாட்டு மானமுமே என்றும் பறிபோம் இழிநிலையைச் சேர்த்துவிட்டார் - (பக் 16) வன்மனத்துப் பேயர்களால் வாடும் திருநாடே கண்ணில் அனல்காட்டிக் கண்டிப்பாய்ச் சென்றவளை எண்ணித்தான் பின்தொடர்தல் ஏற்ற வழியன்றென்று (பக் 18) என அறிவுரையும் பகர்கின்றார். இறைவன் அருளால் அமைகின்ற இயல்பான அழகை, தேடாமல் பெற்ற திருவழகும் தேர்ந்தெடுத்த ஆடை யழகும் அரும்பு நகையழகும் கண்டவர்கள் கண்ணைப் பெயர்க்காமல் கள்ளமுதம் உண்டவர்கள் போலாம் ஒருதன்மை உண்டாக்கும்