பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வளர விடுக

19

களை வளர்ப்பதற்கென்றே ஸ்தாபனங்கள் இருக்கின்றன. அவைகளில் மேல் மாடியிலே திறந்த வெளியிலே சூரிய ஒளி மிகுதியாகக் கிடைக்காத காலத்தில், செயற்கையாகப் பல கிரணங்களை உண்டாக்கி அவற்றில் குழந்தைகளை இருக்கச் செய்கிறார்கள். நம் நாட்டிலே சூரிய ஒளிக்குப் பஞ்சமே இல்லை. குழந்தைகளே வளர்க்க ஏற்ற ஆலோசனைகளைக் கூறும் ஸ்தாபனங்கள்தான் குறை. நாடு முழுவதும் மருத்துவச் சாலைகளும், குழந்தை வளர்ப்பு முறைகளை எடுத்துக் கூறும் ஸ்தாபனங்களும் ஏற்பட்டால் இன்று இக்நாட்டிலே மிகப் பெரியதாக இருக்கும் குழந்தை மரணம் என்ற பரிதாபகரமான நிலைமை மாறிவிடும்.

உணவு, உறக்கம், உபாதைகளைத் தீர்த்தல் முதலியவற்றில் ஒழுங்காகப் பழக்கம் ஏற்பட்டுவிட்டால் அது வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

குறிப்பிட்ட காலத்தில் தூங்கி ஓய்வுபெறச் செய்தல், இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்ளுதல் என்பவை நல்ல பழக்கங்கள். இப்பழக்கங்கள் பிடிபட்டு விட்டால் பல நன்மைகள் உண்டு. ஆகையால் இவற்றை உண்டு பண்ணுவதில் பெற்றோர்கள் சிரத்தை யெடுத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு விஷயத்தினைப் பற்றி எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். சில பெற்றோர்கள் தங்கள் செளகரியத்திற்கென்றே இப்படிப்பட்ட பழக்கங்களை உண்டாக்குகிறார்கள். குறிப்பிட்ட காலத்தில் உணவை ஓர் அளவோடு கொடுப்பதையோ, மலஜல உபாதைகளைப் போக்குவதையோ ஒரு பிடிவாதமாக வைத்துக்கொண்டு அவற்றிற்கெனக் குறிப்பிட்ட காலக் கிரமத்தையே கவனிப்பது சரியல்ல. காலக்கிரமமும், பழக்கமும் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதற்காகவே ஒழிய, மணியாகிவிட்டது உணவு உட்கொண்டே தீரவேண்டும் அதுவும் இவ்வளவு பாலையோ வேறு உணவையோ