பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 (2) அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது. (3) விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது. (4) பிதுரார்ஜிதத்தில் பெண்குழந்தைகளுக்கு ஸ்டி பாகம் கொடுக்க வேண்டும். (5) புருஷன் இறந்தபின்பு ஸ்த்ரீ மறுபடி விவாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது. (6) விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்ருல் கெளரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளே, யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்கவேண்டும். (7) பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக்கூடாதென்றும் பழகக்கூடாதென்றும் பயத்தாலும் பொருமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்து விடவேண்டும். (8) பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளேகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும். (9) தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பிலுைம் அதைச் சட்டம் தடுக்கக் on l— frgil. (10) தமிழ் நாட்டில் ஆண்மக்களுக்கே ராஜரிக சுதந் திரம் இல்லாமல் இருக்கையிலே, அது பெண்களுக்கு வேண்டுமென்று இப்போது கூறுதல் பயனில்ஃ. எனினும் சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும். சென்ற வருஷத்து