பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 காங்கிரஸ் சபையில் தலைமை வகித்தவர் மிஸஸ் ஆனி பெஸண்டு என்ற ஆங்கிலேய ஸ்திரீ என்பதை மறந்து போகக்கூடாது. இங்ங்னம் நமது பெண்களுக்கு ஆரம்பப்படிகள் காட்டினுேமானல், பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரண விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுவார்கள். அப்போதுதான் நமது தேசத்துப் பூர்விக ரிஷிபத்திணிகள் இருந்த ஸ்திதிக்கு நமது ஸ்திரீகள் வர இடமுண்டாகும். ஸ்திரீகளே மிருகங்களாக வைத்து நாம் மாத்திரம் மஹரிஷிகளாக முயலுதல் மூடத்தனம். பெண் உயராவிட்டால் ஆண் உயராது. தமிழ் தமிழில் வேண்டாம். ஆங்கிலத்திலேயே இருக் கட்டும் என்று யாரோ திருநெல்வேலிப் பண்டிதர் ஒருவர் கூ றி வி ட் டா ரா ம். வந்தது அடங்காத கோபம் பாரதியாருக்கு. தமிழ் என்னும் கட்டுரையிலே அவர் எப்படி ஒரேபோடாக போடுகின்ருர் பாருங்கள். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணுேம் என்று வீரமுழக்கம் செய்தவரல்லவா பாரதியார்? அவர் சொல்லுவதை அவர் வாக்கிலேயே கேளுங்கள்: கல்கத்தாவிலிருந்து வெளிப்படும் மாடன் ரெவ்யூ" மாதப் பத்திரிகையின் தை-மாசி ஸஞ்சிகையை நேற்றுப் பொழுதுபோக்கின் பொருட்டாகத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிலே திருநெல்வேலி ஹிந்து காலேஜ் சரித்திர பண்டிதர் பூர் நீலகண்டையர் ஒரு சிறிய கடித மெழுதியிருக்கிருர், ஏற்கெனவே மேற்படி பத்திரிகையில் யேதுநாத ஸர்க்கார் என்ற வித்வான் எழுதியிருந்த