பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 முன்போலக் கீர்த்திக்கு வரவேண்டுமானல், உண்மையான வகுப்புகள் ஏற்படவேண்டும். பொய் வகுப்புகளும் போலிப் பெருமைகளும் நசிக்க வேண்டும். இது நம்முடைய வேத சாஸ்திரங்களின் கருத்து. போலிப் பெரிய மனுஷத்தன்மை ஏதாவது ஒரு சிறிய உத்யோகம்வந்துவிட்டாலும் ஒரு போலிப் பெரியமனுஷத்தன்மை வந்துவிடுகிறது. உடனே தன்னை நவாப் என்று நினைத்துக் கொள்கிருன். இதைப் பெரிய மனுஷத்தன்மை என்ற கட்டுரையில் எள்ளி ந:ை யாடுகின்கிருர் பாரதியார். பெரிய மனுஷத்தன்மை இன்னுமொரு தொல்லை. பெரிய மனுஷத்தன்மைக் கும் சரீரவுழைப்புக்கும் விரோதம் என்று நம்மவர்களில் சிலரின் மனதில் எந்தப் பிசாசோ எழுதிவைத்துவிட்டது. ஆகையால், சொற்பப்பணமுடையவன்கூட, தனக்கு ஜலம் கொண்டு கொடுக்க ஓராளும், குளிப்பாட்ட ஒராளும், தலை துவட்ட ஒராளும் வைத்துக்கொண்டு, பாயோடே கிடக் கும் கிழவியைப் போல் நடந்து கொள்கிருன். மாதம் முப்பது ரூபாய் சம்பளம் வந்தால் போதும், வீட்டிலே அவன் பெரிய நவாப் கைகாலை அசைக்க மாட்டான். மேல் மாடத்திலே போய் ஒரு புஸ்தகம் அல்லது மேல் வேஷ்டி எடுத்துக்கொண்டு வரவேண்டுமானல், அவன் போ! மாட்டான். பந்துக்களை ஏவுவான். வ ய தி லே சிறிய வராயிருந்தால் அவர்களை விலையடிமைபோலே நடத்த வான், அற்பக் காரியங்களுக் கெல்லாம் ஒருவரையொருவ வேலையே.வி வதைக்கும் தொல்லை நமக்குள்ளே மிகவ அதிகம். இக்காலத்திலே வரதட்சிணைபற்றிப் பலமா எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.