பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 7 நோக்கித் தெள்ளிதின் விளக்கும் சிறந்த ஆய்வாளர். தம் ஆசிரியரே வியக்கும் திறன்வாய்ந்த மாணவர். இலக்கிய ஈடுபாட்டில் மெய்மறந்த தன்மையர். அவர்தம் ஒப்பிய லாய்வுக் கட்டுரையை இந்நூல் பெற்றுப் பெருமை பெறு கின்றது. டாக்டர் க. ப. அறவாணன் அவர்கள், செனகால் நாட்டின் தக்கார் பல்கலைக்கழத்தில் ஒப்பியல் ஆய்வுப் பணி புரியும் தக்கார் ஆவர். இளைஞர்.எழுச்சியும் துடிப்பும் உடை யவர். முயற்சியில் இளையாதவர். தமிழன்பால் என்பாலும் அன்புடையராகித் திகழ்பவர். நடுநிலை பிறழாத ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அவர் வழங்கிய ஆய்வுரை யொன்றை இந்நூல் பெற்றுச் சிறக்கின்றது. மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பணிபுரியும் தி.வ. மெய் கண்டார் ஒரு செந்தமிழ்த் தேனி! சுறுசுறுப்பும் விறு விறுப்பும் கொண்ட தொண்டர். தமிழன்பர்க்கெல்லாம் தனியன்பராய்த் திகழ்பவர். இளந்தமிழன் இதழ் தொடங் கிய காலத்தி விருந்து என் பணிகளுக் கெல்லாம் ஆக்கமும் ஊக்கமும் தந்துவருபவர். இந்நூல் வெளிவருவதற்குப் பல வகையிலும் உதவியவர். ஓவியர் அமுதோன் காவிய உணர்வோடு தீட்டிய கண் கவர் வண்ணப் படம் அட்டையை அழகு செய்கிறது. மேற்குறித்த அனைவர்க்கும் என் நன்றி! தமிழறிஞர் பதின்மர் பாராட்டுப் பெற்று வெளி வரும் இந்நூல், தமிழ் மக்கள் பாராட்டினையும் பெற்று விடுமாயின் நான் தமிழ் கற்றதன் முழுப்பயனையும் பெற்று விட்டதாகக் கருதி மகிழ்வேன். எனவே இந்நூலைத் தமிழ் மக்கள் குமுகாயத்தின் திருமுன் படைக்கின்றேன். அன்பன், 12–8–1980 நாரா நாச்சியப்பன்