பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நாச்சியப்பன் என வரும் சொற்கள் சமுதாய மூடத்தனத்தைக் குழி தோண்டிப் புதைக்க கோதையர் கொதித்தெழ வேண்டும் எனக் கூருமல் கூறுகின்றன. கட்குடியிலும் குதிலும் கைப்பொருளை யிழந்த கணவனை விடுத்துத் தாய் வீடு சென்ருள் வள்ளி என்னும் நங்கை. தோழர்களோடு கூடிக் களவிலும் ஈடுபட்டான் கணவன். ஒருநாள் மனைவி வள்ளியையே தோழர் களவுப்பொருளாய்க் கொண்டுவந்து பங்கிட்டுக் கொள்ள முயன்றபோது அவர் களில் ஒருவனாய் இருந்த கணவனுக்குப் புத்தி வந்தது. தோழர்களை விடுத்து மனைவியோடு வாழ முற்பட்டான். கலிவெண்பா யாப்பில் இக்கதை நிகழ்ச்சியைக் கூறுவது "ஒளி மின்னல்’. கவிஞர் இக்கதை நிகழ்ச்சியைக் கவிதையாய் வடித்துத் தந்திருப்பதில் காப்பியக் கதைகளின் தாக்கத்தைக் காண் கின்ருேம். பார்த்திபனைப் போலிவரும் பாராளா விட்டாலும் நேர்த்தியற்ற பெண்தொடர்பில் நிச்சயமாய் அர்ச்சுனர்தான் ! நீதித் தருமனுக்கு நேரில்லை என்ருலும் சூ தில் அவனேதான்; தோற்பதிலும் அப்படியே என்றும், தீவலம் வந்த திருவாட்டி கண்ணகியும் கோவலர்க்கு முன்னே கொடுத்துக் கொடுத்தேதான் வாழ்விழந்த காதை வழிவழியாய் நாமறிவோம் என்றும் வரும் பகுதிகள் இக்கருத்துக்குச் சான்றுரைகள். தன் கணவன் சூதாடித் தோற்பதைச் சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல் வள்ளி படும் துயர நிலையை,