பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 31 பாட்டு பழைய பாட்டையிலேதான் செல்கிறது. எனினும் புதுமையாக இதிற் சமுதாயப் பார்வை தலை நீட்டுகிறது. எல்லாமே கதைக் கவிதைகள்தான், பெரும் பாலும். காவலர் இல்லத்தில் என்பது ஒரு சிறுகதை. எல்லை மீறித் திரைப்படம் பார்க்கச் சென்ற ஏந்திழையாள், காதலனைக் காவலர் இல்லத்தே மணம் முடிக்கப் பெறுவது, ஒரு செய்தி போன்ற நிகழ்ச்சியே! காவல்துறை அதிகாரியே திருமணத்தை நடத்தி வைக்கின்ருர். எனினும் காதல் நிகழ்ச்சிகளைப் பச்சையாய்க் கூருமல், பக்குவமாய் வெளிப்படுத்துகிருர் பாவலர். படத்தில் வருங்காதல் பார்க்கும் பொழுதில் மடப்பெண் அவள்செய்த மட்டற்ற செய்கையெலாம் ஈண்டுரைத்தல் காதல் இலக்கியத்திற் காகாதாம். தீண்டும் இரண்டுயிர்கள் தேர்ந்தநல்லின்பத்தைப் பாரறியக் கூறுவது பச்சை மொழியாகும் ஊரறியக் கூறல் உயர்ந்த செயலன்று (பக்.7) இன்று இளைஞர்கள் பெண்களைக் கண்டால் வெறி'ப் பதையும் பின்தொடர்வதையும் கண்டு மனம்நொந்து ஆசிரியர் விண்டுரைக்கும் பாவடிகள் காரசாரமானவை. பக்கத்தே போய்நின்ருன்; பல்வரிசை தான்விரியக் கெக்கக்கே என்று சிரித்தான்; திரும்பினள் அள்ளி விழுங்குபவன்போல் ஆவலொடு தான்பார்த்தான். (பக். 15) பாவலர் நாச்சியப்பன், நோக்கம் இலையென்று நோக்கும் விழிமொழியே யார்க்கும் உரைத்துவிடும்; அத்தை உணராமல் பின்தொடர்ந்து பின்தொடர்ந்து பேதையரைத் துன்புறுத்தும் வன்மனத்துப் பேயர்களால் வாடும்திருநாடே! (பக்.18) எனவும்,