பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நாச்சியப்பன் உன்னமல் கண்ணப்பன் உன்ம வெறிபிடித்த செந்நாய்போல் நாளும் தொடர்ந்து திரிந்தான் (பக்.18) எனவும் கழறும் பொழுது, அவர் நெஞ்சத் துடிப்பை நம்மால் உணரமுடிகிறது. காவலர் இல்லத்தில் மட்டுமன்றி வாழவைத்தான்' ‘இனியபாதி’ என்ற கதைப் பாடல்களிலும் இளவரசி முல்லை என்ற வரலாற்றுக் கற்பனைப் பாடலிலும் பிறவற்றி லும் பெண்மைக்கு இழைக்கப்படும் தீங்கைக்கண்டு ஆசிரியர் கொதித்தெழுந்து சீறுவதையே காண்கிருேம். வங்கங்கடந்த மங்கை நகரத்தார் சமூகக் கதைபோல மின்னுகிறது. அழகம்மை, மூன்ருண்டுப் பிரிவு எல்லாம் இனம் காட்டும் குறிப்புக்களாகும். இந்த நாட்டின் 'இருள் அகன்றிடவும் ஒளி பெருகிடவும் பாவலர் காணும் கனவுகள் பலவாகும்! நாச்சியப்பன் பாடல்களிலேயே, பண்பின் பரிசு’ தீண்டாமைக் கொடுமையை மையமாகக்கொண்டு, மிகச் சிறப்பாக விளங்குகிறது. அவர் ஒரு காலத்தில் என்னைப் போல் பெரியாரின் கூடாரத்தில் வளர்ந்த புரட்சிச் சிந்தனை உடையவரே. ஈரோட்டுத் தாத்தா என்ற அவர் பாடலும் இதனை வெளிப்படுத்தும். ஒருபுலேயன் தொட்டுக்காத்ததால், ஆற்றில் விழுந்து தப்பித்த உயர்குலத்து மகள் தீட்டாகி விட்டாள் எனக் கொதிக்கும் புருஷர்களை நாம் இப் பாடலில் காண்கின்ருேம். கதை முடிவு என்னவோ நந்தனுரைப்போல இருக்கிறது. ஆயினும் தாகூர் ‘புலைச்சியைப் போல், இப் பாடலும் படிப்பவர் மனத்தில் கிளர்ச்சியைத் தருகிறது. பம்பாய்ப் பஞ்சாங்கமும்’ சிறந்த சீர்திருத்த மனப்பான்மையை வளர்ப்பதாகவுளது. பொதுவாக அழகிய கவிதைகள்; சீரிய கூரிய செழுந் தமிழ் வழக்குகள்; சீர்திருத்தப் பார்வை; பெண்மையின்