பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 45 இத்தேச மக்கள்கொண்ட துயரமெல்லாம் எழுந்தொன்ருய்ச் சேர்ந்ததுவே கஜினி நெஞ்சை எனத் துயரக் களஞ்சியத்தைத் திறந்து காட்டுகிருர் கவிஞர். கவிஞனின் ஏமாற்றம் ஆட்சியாளர்களின் ஆளும் வேட்கை, கொள்ளை இன்பம் காணும் கொடுமை ஆகிய வற்றையெல்லாம் காட்டுகிரு.ர். எனினும், கவிஞனின் துயரைவிட மதத்தின் வலியற்ற வடிவே கவிதையின் முற்படு பொருளாக வெளிப்படுகிறது. - முல்லையோ முல்லை’ முடிவாக இளவரசி முல்லை என்ற குறுங் காவியம் இப் பாடல் தொகுதியில் தனி மணம் வீசுகிறது. கற்பின் அடையாளம் முல்லையாகப் பண்டுதொட்டு வழங்கி வருகிறது. தஞ்சை மன்னனின் மகளாக முல்லை வளர்கிருள். அவளைக் காதலித்த முத்தப்பனே தொடக்கத்தில் காதலே வெறுத்த பட்டினத்தா'ராக இருந்தவன். அவனுக்குக் காதல் பெருமையை உணர்த்திய அவன் நண்பன் பொன்னப்பனே தாமரை என்ற பெண்ணைக் காதலித்தவன். நட்பு, காதல் என்பவற்றை பொய்யாக்கிக் காதலியைக் கை விட்டு, நண்பன் வாழ்வைக் குலைத்து, அவன் காதலியை மணந்து அரசுச் செல்வத்தைத் துய்க்க, ஆசைப்படுகிறது பொன்னப்பன் மனம். இந்த வாழ்க்கை, இதுவரை தமிழ்க் குறுங்காப்பியத்தில் காணுப் புதுமை. பொன்னப்பனைப் படைப்பதும், அவன் போக்கினை விரிப்பதும், கவிதைக்கு எளிய செயலன்று. "மனேன்மணிய ஆசிரியர் கந்தரம் பிள்ளையின் குடிலன், தன்னலம் என்ற புலத்தில் தழைத்துச் செழித்த நச்சுமரம். அவ்வளர்ச்சியில் பிறர்க்குக் கேடுபுரியும் போது புனுகு பூசும் பண்பும் கூட பிறர்க்கு அரிதாகவே புலப்படும்.